சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ..?  
                                    
                                    
                                   Karthik Subbaraj to direct Sivakarthikeyan next film
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 05-ந் தேதி திரைக்கு வரவுள்ளது.
அத்துடன் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் சிவா கல்லூரி மாணவனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதாவது, பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கதை சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Karthik Subbaraj to direct Sivakarthikeyan next film