நடிகையுடன் தகாத உறவில் இருந்த பிரபல நடிகர் - நேரில் பார்த்த நடிகரின் மனைவி பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் யுவராஜ்குமாருக்கு, ஒரு நடிகை உடன் தவறான உறவு இருப்பதாக அவரின் மனைவி குற்றம் சாட்டி உள்ளது, அம்மாநிலத் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பழம்பெரும் நடிகரான ராஜ்குமாரின் பேரன் நடிகர் யுவராஜ்குமார். இவர் யுவா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்/ மேலும் குழந்தை கதாபாத்திரத்தில் பல கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

யுவராஜ் குமார் கடந்த 19ஆம் ஆண்டு தனது ஏழு ஆண்டு காதலியான ஸ்ரீதேவி பைரப்பாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்துக்கு கோரி நடிகர் யுவராஜ் குமார் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், தனது ராஜ்குமார் அகடாமியின் கணக்கிலிருந்து முறைகேடாக பணத்தை மாற்றி, பல சொத்துக்களை வாங்கி உள்ளதாகவும், இதனால் தனது குடும்பத்திற்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளதாகவும், தன்னை மன ரீதியாக தனது மனைவி துன்புறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனுவை தொடர்ந்து யுவராஜ் குமாரின் மனைவி ஸ்ரீதேவி தரப்பில் ஒரு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், யுவராஜ்குமாருக்கும் சக நடிகை ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாகவும், இருவரும் ஒன்றாக விடுதி அறையில் இருந்ததை தான் பார்த்ததாகவும், அதனாலயே தன்னை அடித்து வெளியே தள்ளினார் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டு கர்நாடக மாநில திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Actor Yuva Rajkumar Wife Sri Devi Complaint


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->