நடிகைக்கு மெசேஜ், கொலை வழக்கில் கைதான பிரபல நடிகர்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகர் தர்ஷன், கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்திர துர்காவை சேர்ந்தவர் ரேணுகா சுவாமி. இவர் மருந்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த போது, நடிகர் தர்ஷனுக்கு நெருக்கமான ஒரு நடிகைக்கு சமூக வலைத்தளம் மூலம் தவறான சில கருத்துக்களை அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் எட்டாம் தேதி ரேணுகா சுவாமி படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் ஜூன் ஒன்பதாம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு வடிகாலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ரேணுகாவின் ரேணுகா சுவாமியின் உடலை தெருநாய்கள் சில இழுத்து சென்று கொதறி வைத்துள்ளது. இதனை அடுத்து அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் நடிகர் தர்ஷனை சந்தேகத்தின் அடிப்படையில் இன்று மைசூரில் வைத்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka actor dharshan arrested


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->