வெளியாகிறது கங்குவா படத்தின் டீசர் - கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகி வரும் படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 1,000 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு  சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், கங்குவா படத்தின் டீசர் மார்ச் 19 ஆம் தேதியான நாளை மாலை 4.30 மணிக்கு  வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanguva movie teaser released tomarrow


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->