மீண்டும் கமல் – சிவகார்த்திகேயன் கூட்டணி: ‘ஒன்மோர் டைம்’ அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!முருகனாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?
Kamal Sivakarthikeyan team up again Fans are excited by the announcement of One More Time Is Sivakarthikeyan playing Murugan
பராசக்தி படத்தில் தமிழ் மொழிக்காக போராடும் செழியனாக கவனம் ஈர்த்த சிவகார்த்திகேயன், அமரன் பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்டதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
கோலிவுட்டில் அடுத்த தலைமுறை பாக்ஸ் ஆபிஸ் முன்னணி நடிகராக உயர்ந்து வரும் சிவகார்த்திகேயன், சமீப ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கும் கதைகள் மற்றும் இயக்குநர்களால் தனக்கென வலுவான மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றி, சிவகார்த்திகேயனை ‘பிக் லீக்’ வரிசையில் இணைத்தது என கூறப்படுகிறது.
மதராஸி, பராசக்தி போன்ற படங்களின் வெற்றியால் 100 கோடி வசூல் நாயகனாக நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னொரு பெரிய வெற்றி அவரின் பாக்ஸ் ஆபீஸ் பயணத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையில், தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ‘முருகன்’ கதையை படமாக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அல்லு அர்ஜுன் அல்லது ஜூனியர் என்டிஆர் நடிக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனே அந்த வேடத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த சூழலில், “ஒன்மோர் டைம்” என்ற ஹாஷ்டேக்குடன் கமல்ஹாசன் வெளியிட்ட அறிவிப்பு, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இயக்குநர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், மீண்டும் ராஜ்குமார் பெரியசாமி – சிவகார்த்திகேயன் – கமல் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாக திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
மொத்தத்தில், அமரன் வெற்றிக்குப் பிறகு உருவாகும் இந்த புதிய கூட்டணி, தமிழ்சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Kamal Sivakarthikeyan team up again Fans are excited by the announcement of One More Time Is Sivakarthikeyan playing Murugan