இறுக்கமான மனதுடன் விடைபெறும் ஜோதிகா.! சோகமாக வெளியிட்ட பதிவு வைரல்.! - Seithipunal
Seithipunal


தமிழில் ஓவர் ஆக்டிங் நடிகை என்று பெயர் எடுத்தவர் தான் நடிகை ஜோதிகா. பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை. நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா இருவரும் காதலித்து பல எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணம் செய்து கொண்ட பின் நிறைய படங்களில் ஜோதிகா நடிப்பது இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து கண்ணியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இறுதியாக இவரது நடிப்பில் உடன்பிறப்பே படம் தமிழில் வெளியாகியது. அதன்பின், அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. பின், மலையாளத்தில் மம்முட்டியுடன் சேர்ந்து ஒரு படத்திலும் ஹிந்தியில் ஸ்ரீ என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கின்றார்.

இந்த நிலையில் அவரது ஸ்ரீ படத்தின் பகுதிகளை நடித்து முடித்த ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில், "ஸ்ரீ படத்தில் என்னுடைய பகுதியை நடித்து முடித்து விட்டேன். படக்குழுவிடம் இருந்து இறுக்கமான மனத்துடன் விடைபெறுகிறேன்."என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jyothika about Sri movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->