ரீ-ரிலீஸ் ஆகும் நானியின் ஜெர்சி.! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர் நானி நடித்த 'நான் ஈ' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிபில் வெளியான ஹாய் நான்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் சர்வதேச விருதையும் வென்றது.

இந்த நிலையில், நானி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஜெர்சி திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் நானியுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

கவுதம் தின்னானூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இந்த படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்தத் தகவலை படக்குழு போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jersey movie re release in coming 20th


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->