ஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.! இணையத்தை கலக்கும் போட்டோஷூட்.!
Jersey movie heroine hot photoshoot
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான கொலைகாரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆஷிமா நர்வால். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஆஷிமா நர்வால் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைக்காததால், பாலிவுட் வாய்ப்புகளை தகர்த்தெறிந்து விட்டு தென்னிந்திய சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகின்றார்.
தெலுங்கில் நாடகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து நடித்த ஜெஸ்ஸி படமும் பெரிய ஹிட் அடித்தது. இதன் காரணமாக ரசிகர்களிடையே அவர் மிகவும் பிரபலமானார். அதன், பிறகுதான் அவர் தமிழில் நுழைந்தார்.

தற்போது ராஜபீமா என்ற படத்தில் பிக் பாஸ் ஆரவ்வுக்கு இணையாக நடிக்கின்றார். இந்த படமானது விலங்கிற்கும், மனிதனுக்கும் இடையே உள்ள நட்பைப் பேசும் விதமாக அமைந்துள்ளது. இதில் அவருக்கு டாக்டர் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சமூகவலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கட்டி இழுத்து வைத்திருப்பார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
English Summary
Jersey movie heroine hot photoshoot