என் ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி இந்த பிரிவை அறிவித்துள்ளார் - மனைவி ஆர்த்தி!
Jayam Ravi Divorce announce Aarti statement
மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி நேற்று அறிவித்திருந்தார்.
இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்கள் நிறைந்த ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த வாய்ப்புகளையும் சவால்களையும் முன்வைக்கின்றன.
கனத்த இதயத்துடன் உங்கள் அனைவருடனும் ஆழ்ந்த தனிப்பட்ட புதுப்பிப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.நீண்ட யோசனைகள், சிந்தனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, ஆர்த்தியுடன் எனது திருமணத்தை முறித்துக் கொள்ள கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு அவசரத்தில் எடுக்கப்படவில்லை, மேலும் இது சம்பந்தப்பட்ட அனைவரின் நலன்களையும் கருத்தில் கொண்டு தனிப்பட்ட காரணங்களால் உருவானது.
இந்த இக்கட்டான நேரத்தில் எங்களுடைய தனியுரிமை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும், இது தொடர்பாக எந்தவிதமான ஊகங்கள், வதந்திகள் அல்லது குற்றச்சாட்டுகள் கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விஷயம் தனிப்பட்டதாக இருக்கும்.
பல ஆண்டுகளாக நீங்கள் என் மீது பொழிந்த அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் புரிதலுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி விடுத்துள்ள அறிக்கையில், விவாகரத்து தொடர்பாக சொந்த விருப்பத்தை சார்ந்து ஜெயம் ரவி அவராகவே முடிவு எடுத்துள்ளார். என் கவனத்திற்கு வராமல் என் ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி இந்த பிரிவை அறிவித்துள்ளார் என்பதை நான் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
இது அவராகவே எடுத்த முடிவு. குடும்ப நலன் கருதி அவர் எடுத்த முடிவு இது கிடையாது. கணவர் ரவியுடன் மனம் விட்டு பேச அவரை சந்திக்க நான் பலவித முயற்சிகளை மேற்கொண்டேன்.
மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால், இவற்றை மறுப்பது என் கடமையாக நான் கருதுகிறேன். இந்த கடின காலத்தை நாங்கள் கடக்கும் வரை, எங்கள் தனிப்பட்ட உணவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
English Summary
Jayam Ravi Divorce announce Aarti statement