வில்லனாகிய ஜெய்.. இதுவாவது கைகொடுக்குமா.?! ஏக்கத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் தான் ஜெய். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட, நடிகராகும் வாய்ப்பு குறைவாகத்தான் இருந்தது. 

முதல் முறையாக அட்லியின் ராஜா ராணி திரைப்படத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அதன் பின்னர், ஜெய்யின் மார்க்கெட் அதிரடியாக உயர தொடங்கியது. பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். ஆனால் அவரது திரைப்படங்கள் 80% மொக்கையான கதைகளை கொண்டதுதான். 

மேலும் 90 சதவீதம் திரைப் படங்கள் தோல்வியடைந்தன. தற்போது அவர் ஹீரோ விலிருந்து இசையமைப்பாளராக கூட மாறி இருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் ஜெய் தான் இசையமைப்பாளராகவும் இருக்கிறார்.

இத்தகைய சூழலில் அட்லியின் உதவியாளர் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் வில்லன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கூடிய விரைவில் சாதுவான ஜெய்யை வில்லன் கேரக்டரில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jay in villain character


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal