ரஜினியின் 'ஜெயிலர்'படத்திற்கு சிறப்புக் காட்சிகள் இல்லை?.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது.

திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷரப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து திரையரங்களிலும் ஜெயிலர் திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு தியேட்டர் உரிமையாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதில் அதிகாலை சிறப்பு காட்சியாக ஜெயிலர் திரைப்படம் திரையிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jailor movie special show not allowed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->