'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா! அசத்தலான அந்த அறிவிப்பு வெளியானது! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' என்ற படத்தின் இசை வெளீட்டு விழா வருகின்ற 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்தில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஏற்கெனவே, இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலான நிலையில், 'ஹுக்கும்' எனத் தொடங்கும் 2 வது பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

இந்நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jailer movie music release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->