கவனம் ஈர்க்கும் ''இந்தியன் 2'' படத்தின் நியூ போஸ்டர்!
Indian 2 new poster
ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ''இந்தியன்''. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ''இந்தியன் 2'' திரைப்படத்தின் புதிய போஸ்டரை நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.