இப்படி பாட்டாசு வெடிச்சா எப்படி உங்க தலைவரு முதல்வர் ஆவார்? - Seithipunal
Seithipunal


2012 ஆம் ஆண்டு பவன் கல்யாண்  நடிப்பில் வெளிவந்த கேமராமேன் கங்கா டூ ராம்பாபு  என்ற படம் ஆந்திராவில் படத்தின் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது அவரது ரசிகர்கள் தியேட்டருக்குள் நெருப்பை பற்ற வைத்து விபரீத விளையாட்டில் ஈடுபட்டார்கள். 

இதனால் அரங்கில் இருந்த பொது மக்கள் அலறியடித்து ஓடினார்கள். அத்தோடு நெருப்பை சுற்றி நடனம் ஆடினார்கள்.  இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார்.

பவன் கல்யாண் ரசிகர்கள் திரையரங்குகளை சேதப்படுத்துவது இது முதல் முறை அல்ல ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது படம் நிறுத்தப்பட்ட போது ஜோகுலாம்பா கட்வாலில் உள்ள ஒரு தியேட்டரை சேதப்படுத்தினர். இதேபோல் 2021 ஆம் ஆண்டில் விஜயவாடாவில் சில ரசிகர்கள் குடிபோதையில் ஒரு தியேட்டரை சேதப்படுத்தினர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

பவன் கல்யாண் முதல்வர் நாற்காலியை குறிவைத்து அரசியல் செய்து வரும் நிலையில் அவரது ரசிகர்களின் செயலால் பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How can your leader become the chief minister if firecrackers explode like this?


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->