ஸ்ரீ தேவி பொண்ணுன்னா சும்மாவா? நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் ஜான்வி கபூர்.! - Seithipunal
Seithipunal


கோலமாவு கோகிலா படத்தின் ரிமேக்கான குட் லக் செர்ரி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம்தான் கோலமாவு கோகிலா. இந்தப்படம் நகைச்சுவை கலந்த சுவாரசியமான கதை களத்தை கொண்டிருக்கும்.இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். 

இதில் கதாநாயகனாக யோகிபாபு நடித்திருப்பார். இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு, "குட் லக் செர்ரி." என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு பணிகள் மற்றும் பின்னணி பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இந்த ட்ரெய்லரில் நடிகை ஜான்வி கபூர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அளவிற்கு ஜான்வி கபூர் ஈடு கொடுப்பாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்த நிலையில், வெளியான ட்ரெயிலர் மூலம்  அதை தூள் தூளாக்கி விட்டார், ஜான்வி கபூர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good Luck Jerry Movie trailer


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->