கட்டண தகராறு முதல் வருமான வரி சோதனை வரை...! - ஷில்பா ஷெட்டியின் ‘பாஸ்டியன்’ பப்பில் பரபரப்பு!
From fee dispute income tax raid Shilpa Shettys Bastian pub creates stir
பெங்களூரு எம்.ஜி. ரோடு அருகே உள்ள சர்ச் தெருவில், பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ‘பாஸ்டியன்’ என்ற பிரபல கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவு, பிக்பாஸ் பிரபலமும் தொழிலதிபருமான சத்யா நாயுடு தனது நண்பர்களுடன் வந்து பொழுதுபோக்கில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைப்பிடி அளவிலான மோதலாக மாறியதாகவும், இதில் கேளிக்கை விடுதி ஊழியர்களை சத்யா நாயுடுவும் அவரது நண்பர்களும் தாக்கியதாகவும் புகார் எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான இந்த கேளிக்கை விடுதியில் மும்பையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
வருமான வரி செலுத்தலில் முறைகேடுகள், வரி ஏய்ப்பு குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
பல மணி நேரம் நீடித்த சோதனையின் போது, கேளிக்கை விடுதியின் வருவாய் விவரங்கள், வரி செலுத்திய பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
நிர்வாகிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி தேவையான தகவல்களையும் பெற்றுக் கொண்டனர்.சோதனை முடிவில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுவதுடன், அவற்றை அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
From fee dispute income tax raid Shilpa Shettys Bastian pub creates stir