ஆர்யா பிறந்த நாளில்.. மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்.!  - Seithipunal
Seithipunal


காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி நடிகர் ஆர்யா தன்னுடைய 41-வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றார்.

பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகின்ற 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் எனும் பகுதியில் நடந்து வருகின்றது. 

இத்தகைய நிலையில், ஆர்யாவுடைய 41-வது பிறந்தாள் விழாவானது ஷூட்டிங் ஸ்பாட்டில்  கொண்டாடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் கேக் வெட்டி படக்குழுவினருடன் சேர்ந்து நடுகர் ஆர்யா தன்னுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாடி இருக்கின்றார். 

அத்துடன், காதர்பாஷா படக்குழுவின் சார்பாக அப்பகுதி மாணவர்களுக்கு இலவசமாக மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் ஆடுகளம் நரேன், நடிகர் பிரபு, நடிகை சித்தி இத்னானி மற்றும் இயக்குனர் முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free Cycles for Students In arya Birthday


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->