திரையரங்கில் ஒலிக்கும் 'ஈஸ்வரன்' குரல்.!- சிம்பு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


பொங்கலுக்கு விஜயின் மாஸ்டர் படத்துடன் மோதுவது என்று ஏற்கனவே சிம்புவின் 'ஈஸ்வரன்' படக்குழு முடிவெடுத்து இருக்கின்றது. ஈஸ்வரன் திரைப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகும் சிம்புவின் படம் உலகம் முழுவதும் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. 

சிம்பு மற்றும் விஜய்க்கு இரக்கமில்லையா.!? மருத்துவரின் ஆதங்கம்.! தமிழக  அரசுக்கு கேள்வி.!? - Seithipunal

ஈஸ்வரனும், மாஸ்டரும் மோதிக்கொள்ள தயாராகிய நிலையில் இருதரப்பு ரசிகர்களும் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தனர். மாஸ்டர் படம் தள்ளிப்போனால் வசூல் வேட்டை ஈஸ்வரன் படத்திற்குதான் என்று  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களை ஏமாற்றாமல் மாஸ்டர் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

காசிக்கு சென்ற சிம்பு.! விஸ்வநாதனிடம்

இத்தகைய சூழலில், ஈஸ்வரன் படத்தயாரிப்பு நிறுவனமான மாதவ் மீடியா, ' அனைத்து பிரச்சினைகளும் முடிந்தது. ஈஸ்வரன் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மன்ன, துணைத் தலைவர் கதிரேஷன் ஆகியோர்களுக்கு நன்றி. இது ஈஸ்வரன் பொங்கல்! இது நம்ம பொங்கல்!" என டிவிட் செய்துள்ளது. தற்போது இந்த ட்வீட் கவனம் பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eesvaran movie released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->