ஒரு சொட்டு தண்ணி தர மாட்டோம்.! தமிழகத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கர்நாடக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழகம் பயன்படுத்த ஒரு துளி நீரைக்கூட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் தமிழகத்தில் காவிரி, வைகை, குண்டாறு உள்ளிட்ட நதிகளை இணைக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். 14,400 கோடி செலவில் துவங்கும் இந்த திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டு இருக்கிறது. 

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில் கடலில் கலக்கின்ற உபரி நீரை வறட்சி மாவட்டங்களுக்கு திருப்பி விட இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 

இத்தகைய சூழலில், இது குறித்து பேசிய கர்நாடக முதல்வர், "தமிழக முதல்வர் துவங்கி வைத்த இந்த திட்டத்திற்கு எதிராகமத்திய அரசிடம் மனு தாக்கல் செய்திருக்கிறோம். திட்டத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். தமிழகத்திற்காக ஒரு துளி நீரைக்கூட அனுமதிக்க மாட்டோம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edyurappa speech about EPs plan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->