தேசிய விருது பெற்ற நடிகையை இயக்கப்போகும் சுதா கொங்கரா.?! - Seithipunal
Seithipunal


பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படவுள்ள ஒரு புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்றும்,அதனை சுதா கொங்கரா இயக்குனர் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சுதா கொங்கரா கடைசியாக சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஏற்கனவே, சூர்யா நடித்து தமிழில் வெளியான இந்த படத்தின் ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இதில் நடிகர் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்தவுடன் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சுதாவுக்கு சூரரைப்போற்று திரைப்படத்தை எடுத்து அதன் காரணமாக தேசிய விருது கிடைத்தது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே 2018 மகாநதி திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இருவருமே தேசிய விருது பெற்றவர்கள் என்ற காரணத்தால் இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பு ஏற்ப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director sudha Kongara direct actress Keerthi suresh


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal