பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த ப்ராஜெக்ட் என்ன தெரியுமா?! - Seithipunal
Seithipunal



ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் திரைத் துறையில் அறிமுகமானவர் ஷங்கர். அதற்கு முன்னர் இவர் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும் சிறு, சிறு கதாபாத்திரங்களிலும்  அவ்வப்போது நடித்து வந்தார். 

இவரது இயக்கத்தில் ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், எந்திரன், நண்பன், எந்திரன் 2.0 உள்ளிட்ட பல வெற்றி படங்கள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினி, கமல், விஜய், அர்ஜுன் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களையும் இயக்கியுள்ள ஷங்கர் 'தென்னிந்தியாவின் ஸ்பீல்பெர்க்' என்றும் அழைக்கப் படுகிறார். 

இந்நிலையில் இவரது இயக்கத்தில் ஜூன் 12ம் தேதி நாளை 'இந்தியன் - 2' திரைப்படம் வெளியாகவுள்ளது. 5 வருட போராட்டத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த படத்தின் ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டுள்ள இயக்குனர் ஷங்கர், தனது அடுத்த ப்ராஜெக்ட் என்ன என்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

அதன்படி அவர் தற்போது ஒரு இதிகாசக் கதையை கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. கொரோனா காலக்கட்டத்தில் ஒரு இதிகாச நாவலை முழுவதுமாக ஷங்கர் படித்து முடித்துள்ளதாகவும், அந்த நாவலையே தற்போது மூன்று பாகங்களாக படமாக எடுக்கவுள்ளதாகவும், அதற்கான கதைக்களங்களை அமைக்கும் பணியையும் முடித்து விட்டதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த கதைக்கான கதாபாத்திர தேர்வு நடந்து வருவதாகத் தெரிகிறது.  அதன்படி ஷங்கர் தனது அடுத்த படைப்பாகத் தேர்வு செய்துள்ள இதிகாசக் கதை "வேள்பாரி" என்று தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director Shankar Next Project Updates


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->