பிரபல இயக்குனர், மனைவியுடன் செல்லும் போது விபத்து.! சோகத்தில் திரையுலகம்.!  - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள இயக்குநரான ஜீத்து ஜோசப்பின் திரிஷ்யம் படத்தில் விவேக் ஆர்யன் உதவி இயக்குநராக பணியாற்றியர். இதனை தொடர்ந்து அவர் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கின்றார். கடந்தாண்டு வெளியான ஒருமையில் ஒரு சிஷ்ரம் என்ற படத்தின் மூலமாக விவேக் ஆர்யன் இயக்குநரானார்.

இவர் கடந்த டிசம்பர் 22-ம் தேதி தன்னுடைய மனைவி அமிர்தாவுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது குறுக்கே ஒரு நாய் வந்துள்ளது. எனவே, நாய் மீது மோதிவிடாமல் வண்டியை வேகமாக திசை திருப்பியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து இருக்கின்றார். 

இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விவேக் ஆர்யனுக்கு தலையில் அதீத காயம் ஏற்பட்டதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி விவேக் ஆர்யன் திடீரென மரணமடைந்துள்ளார். விவேக் ஆர்யனின் இழப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director death in bike accident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->