தந்தையின் சாதனையை முறியடித்த துருவ் விக்ரம் – பாக்ஸ் ஆபிஸில் பைசன் காளமாடன் அதிரடி!
Dhruv Vikram breaks his father record Bison Kalamadan is a blockbuster at the box office
துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் பைசன் காளமாடன் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை பதிவு செய்துள்ளது. சியான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் சாதனையையே முறியடித்து தன் தந்தைக்கு டஃப் கொடுத்திருக்கிறார் துருவ் விக்ரம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ஜானரில் உருவான இந்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. ரசிகர்களிடையே அதிரடி வரவேற்பைப் பெற்ற இப்படம், முதல் ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.35 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.27.9 கோடி வசூல் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.25.75 கோடி வசூலாகி, அடுத்த சில நாட்களில் ரூ.50 கோடியைத் தாண்டும் என சினிட்ராக் கணித்துள்ளது. அதேசமயம், கர்நாடகாவில் ரூ.1.2 கோடி, கேரளாவில் ரூ.65 லட்சம், மற்ற மாநிலங்களில் ரூ.30 லட்சம் வசூலாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ரூ.7.1 கோடி வரை வசூல் வந்துள்ளது.
இப்படத்தின் கதையை மாரி செல்வராஜே எழுதியுள்ளார். துருவ் விக்ரம் உடன் பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. ஏழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசையை நிவாஸ் கே பிரசன்னா அமைத்துள்ளார்.
விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியான முதல் ஐந்து நாட்களில் இந்திய அளவில் ரூ.23 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. ஆனால் துருவ் விக்ரத்தின் பைசன் காளமாடன் அதே காலகட்டத்தில் ரூ.27 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தன் தந்தையின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையையே துருவ் முறியடித்திருக்கிறார்.
அதுவும் இங்கேயே முடிவாகவில்லை. இப்படம் இப்போது தெலுங்கு மொழியிலும் வெளியாக உள்ளதால், வருகிற வாரங்களில் பைசன் காளமாடன் வசூல் மேலும் பல மடங்கு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் விக்ரமின் திரைப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகவும், தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை ஹீரோவாக அவர் வேரூன்றியிருக்கிறார் என்பதற்கும் சான்றாகவும் அமைந்துள்ளது.
English Summary
Dhruv Vikram breaks his father record Bison Kalamadan is a blockbuster at the box office