சீக்ரெட்டுகளை அள்ளி தெளித்த தர்ஷன் காதலி.! பாத்திமா பாபுக்கு வைத்த ஐஸ்.!  - Seithipunal
Seithipunal


தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி தயாரிப்பில் தர்ஷன் மற்றும் சனம் இணைந்து நடிக்கும் படம் தான் மேகி இந்த படத்தின் விழா ஒன்றில் சனம் ஷெட்டி அவர்களது காதல் குறித்து மிகவும் ஓபனாக பேசியுள்ளார். 

அதில், “தர்ஷனை முதன் முதலாக விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கிருந்த பலரும் அவரை பார்க்க கதாநாயகன் போல இருக்கிறார் என பேசினர். நான் தர்ஷனை அணுகி ஆடிஷனுக்கு வாங்க என அழைத்தேன். நான் நினைத்தது போல தர்ஷன் மிகவும் பொருத்தமாக இருந்தார்.

தற்பொழுது அவர் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. வெளியில் வந்ததும் மீண்டும் வழக்கம் போல படிப்பிடிப்பு தொடரும். பிக்பாஸில் பலர் கலந்து கொண்டாலும், தர்ஷன் தான் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தவர். இங்கேயும் அப்படி தான். 

அவர் பிக் பாஸ் – 3 ன் டைட்டில் வின்னராக வரவேண்டும் என வாழ்த்த எண்ணுகிறேன். மேகாலயாவில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். இதுவரை 14 படங்களில் நடித்திருக்கிறேன். இருப்பினும், தயாரிப்பு என வரும்போது பல தடைகளைத் தாண்டி வரவேண்டி இருக்கும். 

இந்த விழாவிற்கு பாத்திமா பாபு என் அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்து சிறப்பித்ததற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் வீட்டில் பாத்திமா பாபுஅவர் தர்ஷனை தனது மகன் மாதிரி பார்த்துக் கொண்டார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "என சனம் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharshan lover says about love


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal