வரதட்சணை கேட்டு குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தல்; இளம் பெண் விபரீத முடிவு; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே ஜல்பூரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிருத்திக் என்பவருக்கும் பாதல்பூரை பகுதியைச் சேர்ந்த 24 வயதான தீபிகா என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு வருடத்திற்கு மேலாகியுள்ளது.

14 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணத்தின் போது பெண் சார்பாக, மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணையும் கொடுக்கப்பட்டுள்ளது. பெண் வீட்டாரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் பொருட்களை வாங்கிய போதும் அவர்களின் பேராசை குறைந்தபாடில்லை.

இதனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன் ஹிருத்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் தொடர்ந்து குறித்த இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

பெண் வீட்டார் ஏற்கனவே தங்களது சக்திக்கு மேலாக வரதட்சணை கொடுத்துள்ளதால், அதன் பெண்ணால் மேற்கொண்டு பெற்றோரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இதன் காரணமாக, கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லாமல் மூடி மறைத்துள்ளார். அனாலும், தொடர்ந்து கணவரும், அவரது குடும்பத்தினரும் இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

நாளடைவில் இந்த துன்புறுத்தலால் மனமுடைந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா, நேற்றிரவு வீட்டு மொட்டை மாடிக்கு சென்றவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசார் தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இளம்பெண் தீபிகாவின் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடித்து துன்புறுத்தியதற்கான காயங்கள் இருந்துள்ளன. இது தொடர்பாக பெண்ணின் தந்தை போலீசில் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ள நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் போலீசார் தீபிகாவின் கணவர் ஹிருத்திக், மாமனார் மனோஜ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். 24 வயதான பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young woman commits suicide in Uttar Pradesh due to dowry harassment


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->