தர்பார் படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட அனிருத்!! - Seithipunal
Seithipunal


திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க., கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும், திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை சந்தோஷ் சிவன் மேற்கொள்கிறார். 

இந்த படத்தின் முதற்பார்வை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படத்தின் படப்பிடிப்பானது மும்பையில் துவங்கி வெற்றிகரமாக படைப்பெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி தர்பார் படம் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்நிலையில், சென்னை பாண்டி பஜாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட  பேசிய, தர்பார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தனக்கும் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த அவர். வரும் நவம்பர் மாத்தின் இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharbar film audio launch


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->