இணையத்தில் கலக்கும் தேவரா படத்தின் மேக்கிங் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு பாடல்களும் பின்னணி இசையும் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். 

இந்த படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.172 கோடி வசூல் செய்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 8-ந் தேதி ஓ.டி.டி வெளியாகி, அதிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நான்கு படகுகளில் கடலின் நடுவே சண்டையிடும் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த காட்சி எப்படி உருவாக்கப்பட்டது என்பதை காட்டும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

devara movie published making vedio


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->