முதல் படத்திலேயே பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தெய்வமகள் சத்யா.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
deivamagal sathya act with actor vaibhav
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தப்லிக்ச்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடரின் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் வாணி போஜன்.
சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். மேலும் இவரை தொடரில் மட்டுமின்றி நேரில் பார்ப்பவர்களும் சத்யா எனும் என்று அழைக்கும் அளவிற்கு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் தெய்வமகள் சீரியல் முடிந்த நிலையில், வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த வாணி போஜன் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார்.
அதனை தொடர்ந்து சீரியலில் இருந்து சினிமாவிற்கு தாவிய வாணிபோஜன் தற்பொழுது கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் முதல் படத்திலேயே பிரபல நடிகர் வைபவ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரிக்க உள்ளார்.

தெய்வமகள் சீரியலின் மூலம் பெரியளவில் பிரபலமான வாணிபோஜன்க்கு சினிமா துறையிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
deivamagal sathya act with actor vaibhav