சிம்புவின் வருங்கால மனைவி யார்? என எனக்கு தெரியும்.! ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகர்!! - Seithipunal
Seithipunal


 தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, இயக்குனராக, இசை அமைப்பாளராக இருந்தவர் டி.ராஜேந்தர். டி.ராஜேந்தரனுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகள் உள்ளனர்.அவரது முதல் மகன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிம்பு. இவரும் தந்தையை போலவே பல திறமைகளால் திரையுலகில் கலக்கி வருபவர்.

மேலும் நடிகர் சிம்பு தனது உடல் எடை அதிகரித்து இருந்தநிலையில், வெளிநாட்டிற்குச் சென்று தன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கு திருமணம் நடைபெற்றது

அப்பொழுது உடல் எடை குறைத்து மிக ஸ்மார்ட்டாக சிம்பு திருமண விழாவில் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து சிம்புவின் திருமணம் எப்பொழுது என அனைவரும் கேள்வி கேட்க துவங்கினர். இதனால் சிம்புவின் தந்தை டி.ஆர் மிகவும் வருத்தப்படும் சூழலும் ஏற்பட்டது.

இந்நிலையில் சிம்புவை திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.  நடிகர் கூல் சுரேஷ் சிம்புவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பர்.  இவர் டி ராஜேந்தர் நடத்திவரும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.இந்நிலையில் அவர் நடித்துள்ளஅந்த நிமிடம் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அப்பொழுது பேசிய நடிகர் கூல் சுரேஷ்,சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சிம்புவின்  வருங்கால மனைவி யார்? அவருக்கு எப்பொழுது திருமணம் என்ற விவரங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். ஆனால் இப்பொழுது நான் அதைக் கூற மாட்டேன். மேலும் எப்பொழுது சிம்புவிற்கு திருமணம் என இனி யாரும் டி ராஜேந்தரை  தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். இது தமிழ் சினிமாஉலகில் பெரும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cool suresh talk about simbu marriage


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->