குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுதான் நடக்கிறதா? சிவாங்கியின் வீடியோ! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்போது நான்காவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பிரபலமானதை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து  செய்த சேட்டைகளின் மூலம்  சின்னத்திரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் .

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்களிலும் கோமாளியாக வந்த இவர் நான்காவது சீசனில் குக்காக மாறி இருக்கிறார். அதற்காக சிறப்பு  சமையல் வகுப்புக்கெல்லாம் சென்று வந்ததாக தெரிவித்திருக்கிறார் சிவாங்கி.

குக்காக மாறினாலும் தனக்குள் இருக்கும் கோமாளி சேட்டைகள் மாறாது என்பது போல் இவர் சமீபத்தில் செய்த சேட்டைகள் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அதில் தனது காரை நிறுத்தி விட்டு குக் வித் கோமாளியின் நடுவர் வெங்கடேஷ் பட்  மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விஜே விஷால் மற்றும் ஐயப்பன் ஆகியோரை கலாய்த்து இவர் செய்யும் சேட்டைகள் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cook with comli shivangi makes fun with venkatesh bhat and vj ayyappan goes viral


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?



Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?




Seithipunal