முதலமைச்சர் மு க ஸ்டாலினை சோகத்தில் ஆழ்த்திய மரணம்.!! - Seithipunal
Seithipunal


பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான  மாணிக்க விநாயகம் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். 2001ஆம் ஆண்டு வெளியான தில் திரைப்படத்தில் கண்ணுக்குள்ள ஒருத்தி என்ற பாடல் மூலம் தனது பயணத்தை தொடங்கிய மாணிக்க விநாயகம், பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார்

மேலும், பக்தி பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் என 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகன். 

இந்நிலையில், மாணிக்க விநாயகம் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பிரபல திரைப்படப் பாடகர் திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.

அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin condolences on the death of manikka vinayagam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->