" 3 ஆண்டுகள் படுத்த படுக்கை .. மொத்தம் 23 சர்ஜரி .. நடக்கவே மாட்டான்.. காலை எடுக்கணும் னு சொன்னாங்க.." - 'சியான்' விக்ரம் எமோஷனல் டாக்..!! - Seithipunal
Seithipunal


ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "தங்கலான்". இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.மேலும் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் விக்ரம் பேசியதாவது, "8ம் வகுப்பு வரை நன்றாகப் படித்த நான் அதன் பின்னர் சினிமா மீது வந்த ஆசையால், படிப்பில் கோட்டை விட்டு விட்டேன். 

பள்ளி நாடகங்களிலும் ஹீரோவாக நடிக்காமல் நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்களில் தான் நடிப்பேன். கல்லூரி காலத்தில் நாடகத்தில் ஹீரோவாக நடித்து சிறந்த நடிகர் விருது வாங்கிய அதே நாளில் எனக்கு பைக் ஆக்சிடென்ட் நடந்து கால் உடைந்து விட்டது. அப்போது என் காலையே எடுக்கணும் னு சொன்னாங்க. 

அதன்பிறகு 3 ஆண்டுகள் படுத்த படுக்கையாக ஹாஸ்பிடலிலேயே இருந்தேன். அப்போது மட்டுமே எனக்கு 23 சர்ஜரிகள் நடந்தன. இனிமே இவன் நடக்கவே மாட்டான் என்று அப்போது டாக்டர் என் அம்மாவிடம் கூறினார். ஆனால் நான் அதையும் மீறி நடந்து விட்டேன். 

அதன்பிறகு வேலைக்குச் சென்று கொண்டே கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை சிறிய ரோல் கூட போதும் என்று மிகவும் போராடிக் கொண்டே வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருந்தேன். அதன் பின்னரும் சினிமாவில் தோல்வியை சந்தித்தபோது பலரும் நடிப்பதை விட சொன்னார்கள். 

ஆனால் என்னை நம்பியதால் தான் இன்று இந்த மேடையில் அமர்ந்திருக்கிறேன். அப்போதும் எனக்கு வெற்றி கிடைத்திருக்கவில்லை என்றால், இப்போதும் முயற்சித்துக் கொண்டு தான் இருந்திருப்பேன்" என்று மிகவும் எமோஷனலாக பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chiyan Vikram Emotional Speech in Thangalaan Movie Audio Launch Function


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->