வெளியானது சீயான் 62 வின் மாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவவருமான விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் "தங்கலான்" திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து விக்ரமின் 62-வது படத்தை சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக சீயான் 62 என்று பெயரிட்டுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இந்த நிலையில், சீயான் 62 இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நடிகர் விக்ரம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி சீயான் 62 படம் குறித்த முக்கிய அறிவிப்பு விக்ரமின் பிறந்தநாளான நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chiyaan 62 movie update


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->