மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சேரன்.. லொஸ்லியா, கவின் காதலில் விரிசல்? வயித்தெரிச்சலில் கவின்! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் வீட்டில் இருந்த சேரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷன் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எல்லோருக்கும் பிரியாவிடை கொடுத்துவிட்டு சேரன், கமலை சந்தித்தார். அப்போது சேரனை சீக்ரெட் ரூமுக்குள் அனுப்பப்போவதாக  பிக்பாஸ் அறிவித்தார். இதனை தொடர்ந்து சீக்ரெட் ரூமுக்கு சென்ற சேரன், அங்கிருந்தபடியே  பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் அனைத்தையும் கவனித்தார்.

நேற்று சேரன்  பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியார்களிடம் கடிதம் மூலம் கேள்வி கேட்டார். கடிதத்திற்கு போட்டியாளர்களும் பதில் அளித்தனர். ஏற்கனவே  பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி ஒளிபரப்பபடுகிறது என்பதை பார்த்த வனிதா, அதற்குள் இங்கு நடந்த விஷயங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டிருக்காது, சேரன் இங்குதான் இருக்கிறார் என்று கூறினார்.தொடர்ந்து அண்ணா, அண்ணா என்றும் அழைத்தார். 

இந்நிலையில் இன்று வெளியான முதல் பிரோமோவில் சீக்ரெட் ரூமில் இருந்து சேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அவரை பார்த்ததும், சாண்டி, லாஸ்லியா, வனிதா, ஷெரின், முகென், தர்ஷன் ஆகியோர் அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் கத்தினார்.தர்ஷன் சேரனை தூக்கியே விட்டார்.

இதனை தொடர்ந்து வனிதா சேரனிடம் இங்கேயே இருந்து எல்லாத்தையும் பார்த்து ஒட்டு கேட்டு வர்றீங்களா என்று செல்ல சண்டை போட்டார். கவின் சேரனுக்கு கை மட்டும் கொடுத்தார். சேரனும். கவினை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே சேரன், தங்களின் காதல் விஷயத்தில் தலையிடுவதை தலையிடுவது கவினுக்கு பிடிக்கவில்லை. நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் யார் நம் விஷயத்தில் தலையிடுவது என்று லாஸ்லியாவை மறைமுகமாக தூண்டிவிட்டார். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheran in bigg boss home


கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
கருத்துக் கணிப்பு

5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா
Seithipunal