சந்திரமுகியோட பெஸ்ட் ஃபிரண்டு நான் தாண்டா...! - வெளியாகிய வடிவேலு டப்பிங் - Seithipunal
Seithipunal


நடிகர் வடிவேலு, 'சந்திரமுகி 2' படத்துக்கான டப்பிங் பணிகளை தற்போது தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய வெற்றி படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ராணாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். 

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூர், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. 

இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு முழுமையாக முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். 

தற்போது இறுதி கட்ட பணிகளான டப்பிங், எடிட்டிங் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வடிவேலுக்கான டப்பிங் தொடர்பாக, பட குழு வெளியிட்டுள்ள வீடியோவில் சந்திரமுகி பார்ட் 1, பார்ட் 2, பார்ட் ,3 பார்ட்... 10 வரைக்கும் எடுத்தாலும் சந்திரமுகி பெஸ்ட் ஃபிரண்டு நான் தாண்டா...! என வடிவேலு பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

வடிவேலுவை முன்னதாக 'மாமன்னன்' படத்தில் முற்றிலும் வேறு ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்த்தனர். 

தற்போது வடிவேல் இந்த படத்தின் மூலம் மீண்டும் காமெடி நடிகராக ரசிகர்கள் பார்க்க உள்ளனர். இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandramukhi 2 movie Vadivelu dubbing


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->