கேப்டன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படம், வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பட குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவான ரெடி படத்தில் ஆர்யா - சயீஷா இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கேப்டன் படம் மூலம் மீண்டும் ஆர்யாவுடன் கைகோர்த்துள்ளார் சக்தி சௌந்தரராஜன். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த நிலையில், தற்போது இப்படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பட குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்புள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளனர். இதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இந்தப் படத்தை வெளியிடுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Captain movie release date announcement


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->