வரிகளுடன் வெளியானது கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல்.! - Seithipunal
Seithipunal


இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர்கள் தனுஷ், பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. 

மேலும், இது மூன்று பாகங்களாக வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியானது. இதைத் தொடர்ந்து, நடிகர் தனுஷின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. 

இதையடுத்து படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் எக்ஸ்ளூசிவ் புகைப்படங்களை வெளியிட்டதுடன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது என்பதையும் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் 'கில்லர் கில்லர்’ என்ற முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. ‘இந்த வறண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் …நாந்தாண்டா நீதி …. நாந்தாண்டா நீதி …. Killer killer captain miller ….. Killer killer captain miller’ என்ற பாடல் வரிகளுடன் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு தரும் தனுஷ் ரசிகர்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

captain millar movie first song lyrical vedio revelved


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->