பிகில் ரிலீஸ் ஆகும் தேதி மாற்றம்? வெளியான தகவல்!! - Seithipunal
Seithipunal


அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில். இதன் படப்பிடிப்பு 2 மாதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

விஜய் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார். அந்த கால்பந்து அணியின் கேப்டனாக இந்துஜா நடித்து வருகிறார்.  மேலும் விஜய் பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு நடிகைகளில் ஒருவர் காயத்ரி ரெட்டி. 

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்கிற பாடல் படக் குழு வெளியிடும் முன்பே  லீக் ஆனதை தொடர்ந்து படக்குழு அப்பாடலை யூ-ட்யூபில் வெளியிட்டது. 

அண்மையில் பிகில் படத்தில் நடித்து வந்த கதிர், தனது ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், படத்தில் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் நிறைவடைந்ததை முன்னிட்டு விஜய் தன்னுடன் பணியாற்றிய பிகில் படக்குழுவினர் 400 பேருக்கும் தங்க மோதிரத்தை பரிசளித்தார். தற்போது அவரை 95 சதவீத பிகில் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாகவும், விஜய் தற்போது டப்பிங்கை தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிகில் படம் சுமார் 130 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள பிகில்  படம் அக்டோபர் 24 ஆம் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 24 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக வரும் 3 நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigil release date changed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->