பிகில் பட வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்.! அதிர்ச்சியில் அட்லி.! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் அக்டோபர் 25 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. 

எப்போதும் போல நடிகர் விஜய்யின் பிகில் படத்திற்கும் சர்ச்சையில் கிளம்பியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சிவில் நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் பிகில் பட கதை தன்னுடையது என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் மனுவை தாக்கல் செய்த அட்லீ தரப்பு, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் தொடரவேண்டும் என்றும் அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அட்லி தரப்பு தொடர்ந்து வாதாடி வந்தனர். இதன் காரணமாக வழக்கை வாபஸ் பெற்ற உதவி இயக்குநர் கே.பி.செல்வா. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், பிகில் திரைப்படம் தொடர்பாக உரிமையியல் வழக்குத் தொடர உதவி இயக்குநர் கே.பி.செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விளம்பரம் மற்றும் பணம் பறிப்பதற்காக கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக உதவி இயக்குநர் கே.பி.செல்வா மீது அட்லி தரப்பு வாதடியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigil case chennai high court investigate


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal