பிக்பாஸ் 5 டைட்டில் கோப்பையுடன் ராஜூ.! வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு எலிமினேஷன்கள் நடைபெற்றது. மேலும், வைல்டு கார்டு எண்ட்ரீயும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது மொத்தம் 18 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி என 20 பேர் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் தற்போது, ராஜு, பாவனி, நிரூப், ப்ரியங்கா, அமீர் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

இதில், கடைசி எபிசோடுக்கான ஷூட்டிங் நேற்று காலை தொடங்கி இரவு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு கிராண்ட் பைனல் ஒளிபரப்பாகிறது. இதையடுத்து பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதை உறுதிப்படுத்தும் விதமாக ராஜு கையில் பிக்பாஸ் 5 கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Biggboss 5 tittle winner raju with cup


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->