ஹீரோவாக அறிமுகமாகும்  பிக்பாஸ் பாலாஜி.! குவியும் வாழ்த்துகள்.! - Seithipunal
Seithipunal


புதிய படம்  ஒன்றில்  நடிப்பதற்காக ஒப்புக் கொண்டு இருக்கும் பாலாஜி முருகதாஸ். இந்த தகவலை தானே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். இந்த செய்திகளை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். 

கட்டுகோப்பான உடல் அமைப்பை கொண்டவர் பாலாஜி முருகதாஸ் தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 வது சீசனில் உள்ள போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மிகவும் பிரபலமாகி வலம் வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 4ன் காதல் மன்னன்.மாடலிங் துறையை சேர்ந்த பாலாஜி முருகன், , பயில்வான், தைரியசாலி, என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். பிக் பாஸ் சீசன் 4 ல் தன்னை தானே செத்துக்கியவன் என்று பாடல் பாடாத குறைக்கு பறைசாற்றிக் கொண்டு உள்ளார்.
 
ஆரியுடன் சண்டையிட்டு மண்டையை முட்டிக்கொண்ட நேரத்தில் கூட, ஷிவானியுடன் தனி ட்ராக்கை ஓட்டிக்கொண்டு இருந்தார் மிஸ்டர் பாலாஜி. இந்த வீட்டில் ஷிவானியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இருவருக்கும் இடையே காதல் இருந்தாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில், ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டில் நுழைந்து பாலாஜிக்கு எடுபுடி வேலை செய்யத்தான் இங்க வந்தியா என ஷிவானியை கோபத்துடன் திட்டித்தீர்த்துவிட்டு வெளியேறி விட்டார்.

என்னத்தான் பாலாஜி முருகதாஸ் மேல் பல்வேறு சர்ச்சைகளை எழுந்தாலும், ஏராளமான ரசிகர்களை தன்னுடைய ஹேன்சம் லுக்கால் தன் வசப்படுத்தி வைத்துள்ளார். அதிக அளவில் பெண்களின் ஆதரவு இருப்பினும் பிக் பாஸ் வீட்டின் 105 வந்து நாட்களில் 2வது இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து எதிர்பார்க்காததை எதிர்பார் என கூறியுள்ளார். இத்திரைப்படத்தை லிப்ரா புரோடக்ஷன் தயாரிக்க உள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவல்களால் பாலாஜியின் ரசிகைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

balaji murugadoss as hero


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal