சின்னத்திரையிலிருந்து சினிமா ஹீரோவாக வந்த பாலா!- முதல் படமே சர்ச்சையில் சிக்கியது...!
Bala who came from small screen big very first film was embroiled controversy
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான 'கே.பி.ஒய். பாலா', அண்மையில் வெளியான 'காந்தி கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இயக்குனர் ஷெரீப் இயக்கிய இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சென்னையில் உள்ள சிவசேனா கட்சியினர், காந்தி கண்ணாடி திரைப்படத்தில் பிரதமர் மோடியை அவமதிக்கும் காட்சிகளும் வசனங்களும் உள்ளதாகக் தெரிவித்து, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.
மேலும், இப்படத்தின் இயக்குனர் ஷெரீப், நடிகர் பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Bala who came from small screen big very first film was embroiled controversy