தீபிகா படுகோனுக்கு நான் வேண்டும்.. பாபா ராமதேவ் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


பிரபல திரையுலக நடிகையான தீபிகா படுகோனிற்கு தன்னை போன்ற ஆன்மீக குருவுடைய ஆலோசனை வேண்டும் என்று யோகா குரு ராமதேவ் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் மாணவர்களின் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இந்த விசயத்திற்கு ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த விஷயத்தில் அரசு சார்பாக இடது சாரிகள் தங்களின் மீது தாங்களே தாக்குதல் நடத்திக்கொண்டனர் என்று தெரிவித்திருந்தனர், இந்நிலையில், இந்த தாக்குதல் தங்களால் நடத்தப்பட்டது என்று கூறி இந்து அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் சந்தித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனும் நேரடியாக சென்று மாணவர்களை சந்தித்தார். 

இந்த சந்திப்பிற்கு பின்னர் நடிகை தீபிகா படுகோன், சபக் திரைப்படம் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கூறி பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் யோகா குரு பாபா ராமதேவ் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த சந்திப்பில், நடிகை தீபிகா படுகோன் அரசியல் மற்றும் சமூக, கலாச்சார பிரச்சனைகள் குறித்து நன்கு படிக்க வேண்டும். எல்லாத்திலும் மேலாக நமது நாடு என்பதினை புரிந்து கொள்ள வேண்டும், பொது அறிவு நன்கு கிடைத்த பின்னரே முடிவெடுக்க வேண்டும். அவருக்கு தன்னை போன்ற நபரின் ஆலோசனை கட்டாயம் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

baba ramdev speech about deepika padukone


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->