பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது அவதார் 3-ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..! - Seithipunal
Seithipunal


ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த இந்தப் படத்தின் அடுத்த பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

 

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 3-ம் பாகம், 2025-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக இந்தப் படத்தின் தலைப்பை, இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் நடிகர்கள் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். படத்துக்கு ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 

இந்த நிலையில், இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது, ரசிகர்களுக்கு அவதார் உலகத்தின் முதல் தோற்றத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. புதிய நாவி பழங்குடியினர் மற்றும் பசுமையான, அன்னிய உலகத்திலிருந்து பிரமிப்பூட்டும் காட்சிகளைக் காட்டுகிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படம் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

avathar 3 first look poster published


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->