அவதார் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது..! - Seithipunal
Seithipunal


ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும், பிரம்மாண்டத்தின் மறுபெயர் ஆக அறியப்படும் இயக்குனருமான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு 'அவதார்' திரைப்படம் வெளியாகி, உலகமெங்கும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

வெள்ளித்திரையில் இவ்வளவு ஒரு பிரம்மாண்டத்தை வெளிக்காட்டி, மனிதர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்து சென்றிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். சுமார் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது.

ஒரு இன மக்களை அவர்களின் இருப்பிடத்திலிருந்து துரத்தி விட்டு, அதை ஆக்கிரமிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை, எதிர்த்து நடைபெறும் சண்டை தான் கதை. இதில் காதல், உறவு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். இந்தக் கதையை மிக பிரம்மாண்டமாக, நேர்த்தியாக செதுக்கி வைத்திருந்தார் ஜென்ஸ் கேமரூன். 

அவதார் இரண்டாம் பாகம் வரும் டிசம்பரில் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அவதார் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avatar 2 trailer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->