அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் உறுதி.. திருமண அழைப்பிதழ் புகைப்படம் வைரல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சூது கவ்வும் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் அசோக் செல்வன். அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதன்படி இவரது நடிப்பில் வெளியான தெகிடி, நித்தம் ஒரு வானம், ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக உருவெடுத்துள்ளார்.

இதில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அதன்படி நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும், இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அழைப்பிதழில், திருநேல்வேலி மாவட்டம் இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை இல்லத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 6-7 மணியளவில் திருமணம் செய்ய இருப்பதாக அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமணம் முடிந்தவுடன் அனைவருக்கும் பசுமை விருந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ashok Selvan Keerthi pandian marriage invitation


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->