ஹீரோவாகும் ஆசையை ஏ.ஆர் ரகுமான் கைவிட இப்படி ஒரு காரணமா.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில்  மணிரத்னம் இயக்கிய ரோஜா என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர்  ஏ.ஆர் ரகுமான். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், இந்தி என்று பல்வேறு மொழிளிலும், பல பிரபல நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசை அமைத்து உச்சம் தொட்டு இப்பொழுது இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். மேலும் இவர் ஆஸ்கார் போன்ற பல விருதுகளையும் வென்று உள்ளார்.

ஏ.ஆர் ரகுமான் தற்போது 99 சாங்க்ஸ் என்ற திரைப்படத்துக்கு கதாசிரியராகவும்,தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் அடுத்த திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், சினிமாவில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.

 இந்த நிலையில் இதனை குறித்து விளக்கமளித்த ஏ.ஆர் ரகுமான் இயக்குனராக மாறுவதற்கு எனக்கு இப்போது நேரம் இல்லை என்றும்,  அதற்கு பல காலம் ஆகலாம் என்றும் கூறியுள்ளார். எனினும் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிதாக உள்ளது. 99 சாங்ஸ் திரைப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது குறித்து நான் முடிவெடுப்பேன்.

மேலும் உங்களை நடிகராக காண முடியுமா என்ற கேள்விக்கு, நான் எனது சொந்த உலகிலே இருக்க விரும்புகிறேன். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன். ஆகையால் அமைதியாக இசை, கதை எழுதவே விரும்புகிறேன் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ARRahman speech about his carrier


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal