நயன்தாரா, ஜெய் மீது வழக்கு! அதிர வைக்கும் பின்னணி! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெளியான நடிகை நயன்தாராவின் 75-வது திரைப்படம் 'அன்னபூரணி' கலவையான விமர்சங்களை பெற்றிருந்தது. 

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர்கள் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்த இந்தப் படம் அண்மையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இந்த நிலையில், சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னபூரணி படம் இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், புகாரின் அடிப்படையில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய், பட தயாரிப்பாளர் ரவீந்திரன், ஜதின் சேத்தி, புனித் கோயங்கோ உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

நடிகை நயன்தாரா மும்பை போலீசார் வழக்குப்பதிவு Nayanthara Mumbai police case 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annapoorani movie issue Case complaint against nayanthara and jai


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->