AK62 : அஜித் - விக்னேஷ் சிவனின் பட்ஜெட் இத்தனை கோடியா? வெளியான உறுதியான தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ‌.

இதனையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் இணைகிறார். இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் AK62 என அழைக்கப்படும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாகவும், இதை 2023 தீபாவளிக்கு வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் AK62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது இந்த படத்தில் காமெடி நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், AK62 திரைப்படம் 190 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AK62 movie budget 190 crores


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->