பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கிறார். 

இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். 

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர். 

சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா அஜர்பைஜான் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில் நடிகர் அஜித், நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்டார். அதாவது சிலருடன் அஜித் பேசிக் கொண்டிருந்தபோது அங்கே பாவனா வர, அஜித் அவரிடம் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது என தெரிவித்து மன்னிப்பு கேட்டார். 

அதற்கு பாவனா நீங்க தாமதமாக வருவீர்கள் என சொன்னதால் நானும் கொஞ்சம் தாமதமாக வந்தேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith Bhavana video goes viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->